சல்மான் கானை தீவிரவாதி பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான்
பலூசிஸ்தான் குறித்த பேச்சால் சல்மான் கானை தீவிரவாதி பட்டியலில் சேர்த்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தான் அரசாங்கம் நடிகர் சல்மான் கானை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் (1997) 4வது அட்டவணையின் கீழ் சேர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது - இது பயங்கரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களுக்கான பட்டியலாகும். சமீபத்தில் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த ‘ஜாய் ஃபோரம் 2025’ நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் கான், “இப்போது, நீங்கள் ஒரு இந்தி படத்தை தயாரித்து இங்கே (சவுதி அரேபியாவில்) வெளியிட்டால், அது சூப்பர்ஹிட்டாக இருக்கும். நீங்கள் ஒரு தமிழ், தெலுங்கு அல்லது மலையாள படத்தை தயாரித்தால், அது நூற்றுக்கணக்கான கோடி வியாபாரம் செய்யும், ஏனென்றால் மற்ற நாடுகளிலிருந்து ஏராளமானோர் இங்கு வந்துள்ளனர். பலுசிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்... அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்" என்றார்.
பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்ட இந்தக் கருத்து, இஸ்லாமாபாத் அதிகாரிகளை கோபப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலூசிஸ்தான் குறித்த பேச்சால் நடிகர் சல்மான் கானை தீவிரவாதி பட்டியலில் பாகிஸ்தான் சேர்த்துள்ளது.


