அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சை! பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம் காணவில்லை

 
z

அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சையாக பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம்  மர்மமான முறையில் காணவில்லை என புகார் எழுந்துள்ளது.

Ayodhya Mystery: Sacred Parijat Tree Planted By PM Modi Went Missing From Ram Mandir Temple GroundsAyodhya Mystery: Sacred Parijat Tree Planted By PM Modi Went Missing From Ram Mandir Temple Grounds


அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி திருத்தலத்தில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை  பதிவு செய்து, உச்ச நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிபிஐ போன்ற சுதந்திரமான முகமையைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அனூப் பிரகாஷ் அவஸ்தி அனுப்பியுள்ள இந்த மனுவில், கோவில் நன்கொடைகள் முறைகேடாக கையாளப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவும், மேலும் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) போன்ற சுயாதீன அமைப்பின் மூலம் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் வழங்கும் நன்கொடைகள் மற்றும் காணிக்கைகளின் வசூல், கணக்குப் பதிவு, பாதுகாப்பு மற்றும் செலவினங்கள் ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்ய, தொடர்ச்சியான நீதித்துறை கண்காணிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் அடுத்த சர்ச்சையாக பிரதமர் மோடி நட்ட புனித பாரிஜாத மரம்  மர்மமான முறையில் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. அயோத்தி ஸ்ரீ ராம் ஜன்மபூமி வளாகத்தில் காணிக்கை முறைகேடு புகார்கள் தொடர்பாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், தற்பொழுது மற்றொரு புதிய விவாதம் கிளம்பியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ராமர் கோயில் பூமி பூஜையின் போது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் நட்டு வைக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புனித 'பாரிஜாத மரம்' அங்கிருந்து மர்மமான முறையில் காணாமல் போயுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இது ஆன்மீக மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.