சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் சுட்டு தற்கொலை

 
suicide

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

दिग्गज क्रिकेटर सचिन तेंदुलकर के सिक्योरिटी गार्ड ने की आत्महत्या, जांच में  जुटी पुलिस - sachin-tendulkar-security-guard-prakaash-kaapade-commits- suicide-by-shot-himself


சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர் ஜவான் பிரகாஷ் கப்டே, விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றபோது தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த குடும்பத்தினர், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பிரகாஷ் ஏற்கனவே இறந்து விட்டார். 

பிரகாஷ் தற்கொலையை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனினும் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தற்கொலைக்கான காரணத்தை அறிய பிரகாஷின் பெற்றோர், மனைவி, குழந்தைகள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.