எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் மக்களுடன் இணைந்து போராட்டம்... சச்சின் பைலட் எச்சரிக்கை

 
காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும்: சச்சின் பைலட்  நம்பிக்கை

இந்த மாத இறுதிக்குள் எங்களின் கோரிக்கைகள் (முந்தைய பா.ஜ.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்) நிறைவேற்றவில்லை என்றால், மாநிலம் முழுவதும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவேன் என்று அசோக் கெலாட் அரசுக்கு சச்சின் பைலட் எச்சரிக்கை விடுத்தார்.

ராஜஸ்தானில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது நடந்த ஊழல் வழக்குகளில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ்  அரசு செயல்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 11ம் தேதி முதல்  ஐந்து நாட்கள் அஜ்மீரிலிருந்து ஜெய்ப்பூர்  வரை ஜன் சங்கர்ஷ் யாத்திரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சச்சின் பைலட் மேற்கொண்டார். சச்சின் பைலட் நேற்று ஜெய்ப்பூரில் தனது ஜன் சங்கர்ஷ் யாத்திரையை நிறைவு செய்தார். இந்த மாத இறுதிக்குள் எங்களின் கோரிக்கைகள் (முந்தைய பா.ஜ.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்) நிறைவேற்றவில்லை என்றால், மாநிலம் முழுவதும் பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவேன் என்ற எச்சரிக்கையுடன் சச்சின் பைலட் தனது யாத்திரையை நிறைவு செய்தார். 

பா.ஜ.க.

ஜெய்ப்பூரில் சச்சின் பைலட் பேசுகையில்,  நாங்கள் காந்திய வழியில் உண்ணாவிரதம் இருந்தோம். ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். நாங்கள் ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு குக்கிராமத்திற்கும் செல்வோம். சில நாட்கள் வெயிலில் நடப்பது வலி இல்லை. ஆனால் கேள்வித்தாள் கசிவு காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை நினைத்து பாருங்கள். ஊழல் காரணமாக கேள்வித்தாள் லீக் ஏற்படுகிறது. 

அசோக் கெலாட்

ஊழல் விவகாரத்தை எங்கள் (காங்கிரஸ்) அரசாங்கத்தால்  திறம்பட கையாள முடியவில்லை என்று நான் நீண்ட காலமாக கூறி வருகிறேன் என்று தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.  முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே யான கருத்து வேறுபாடுகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதால், சச்சின் பைலட் காங்கிரஸை விட்டு வெளியேறக்கூடும் என்று ஊகங்கள் பரவி வருகின்றன.