மாசி மாத பூஜைக்காக வரும் 13ம் தேதி சபரிமலை நடை திறப்பு!

 
sabarimala

சபரிமலை கேரளாவிலுள்ள மேற்கு ‎மலைத்தொடர்களில் பத்தனம்தித்தா மாவட்டத்தில் உள்ள ஒரு புண்ணியத் தலமாகும். மஹிஷி என்ற ‎பெயர்கொண்ட அசுரபலம் கொண்ட அரக்கியை கொன்ற பிறகு ‎சுவாமி ஐயப்பன் தியானம் செய்த இடமே சபரிமலை என ‎வழங்கப்படுகிறது. பதினெட்டு மலைகளுக்கு இடையே சபரிமலை அய்யப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் ஒரு ‎மலையின் உச்சியில் உள்ளது. மேலும் சராசரியான ‎கடல் மட்டத்துடன் ஒப்பிடும் போது, 914 மீட்டர் உயரத்தில் ‎காணப்படுகிறது. மேலும் மலைகள் மற்றும் காடுகளால் ‎சூழ்ந்துள்ளது. சபரிமலையை சூழ்ந்துள்ள ஒவ்வொரு மலையிலும் ‎கோவில்கள் காணப்படுகின்றன. 

sabarimala

இந்நிலையில் மாசி மாத பூஜைக்காக வரும் 13ம் தேதி சபரிமலை நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து 13ம் தேதி முதல், 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

sabarimala

முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கேரள அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.