சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு..!

 
sabarimala

சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி இன்று சபரிமலை நடை திறக்கப்படுகிறது. 

sabarimala

சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி சபரிமலை நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது.மறைந்த திருவிதாங்கூா் மன்னா் சித்திரை திருநாள் பலராம வா்மா சபரிமலை கோயிலுக்கு பல்வேறு பணிகளை செய்துள்ள நிலையில்,  மண்டல பூஜை நாளில் ஐயப்பனுக்கு அணிவிக்கும் 426 பவுன் தங்க அங்கியையும் காணிக்கையாக அளித்துள்ளார்.  

இதன் காரணமாக மறைந்த திருவிதாங்கூா் மன்னா் சித்திரை திருநாள் பலராம வா்மாவின்  பிறந்த நாளான ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திர தினத்தன்று ஐயப்பனுக்கு செய்யப்படும் விசேஷ பூஜை சித்திரை ஆட்டத் திருநாள் என்று கொண்டாப்பட்டு வருகிறது.

sabarimala

இந்நிலையில் சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி இன்று  மாலை 5 மணிக்கு சபரிமலை நடை திறக்கப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.  நாளை அபிஷேகம் முடிந்து ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், படி பூஜை நடைபெற்று இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.