சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!!

 
sabari

மண்டல பூஜை மற்றும் மகர விளக்கிற்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது.

கொரோனா காரணமாக கேரள மாநிலம் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.  தற்போது கொரோனா  குறைந்துள்ளதால் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்குகாக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  புதிய மேல்சாந்திகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் நாளை மண்டல கால பூஜைகள் தொடங்குகிறது.

ttn

சபரிமலையில் இன்று முதல் 2022ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வரை 5 கட்டங்களாக பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படும் என்றும் சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு 7,500 போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பை ,நிலக்கல் , சன்னிதானம் ஆகிய இடங்களுக்கு தனித்தனியாக போலீஸ் கட்டுப்பாடு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் காலை முதல் பகல் 12 மணிவரை சாமிக்கு அபிஷேகம் செய்யும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதேசமயம் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

நாளை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெற உள்ள நிலையில் சபரிமலைக்கு இருமுடி கட்டி கோயிலுக்கு பக்தர்கள் வருவார்கள் என்பதால் இணைய வழி அனுமதி மூலம் தினசரி 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். நேரில் வந்து பதிவு செய்யும் வசதி கனமழை காரணமாக 3 நாட்களுக்கு நிறுத்தப்படுவது ஆகவும்,  பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என்றும் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது . ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதியும்,  மகர பூஜை விளக்கு ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.