எதிர் பாலினத்தவர்களுக்கிடையே மட்டுமே திருமணம் நடக்க முடியும்... மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்.

 
திருமணம்

எதிர் பாலினத்தவர்களுக்கிடையே மட்டுமே திருமணம் நடக்க முடியும். ஒரே பாலின திருமணம் குறித்து அரசாங்கத்தின் கருத்துடன் சங்கம் உடன்படுகிறது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.

ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக்களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக இந்த மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஒரே பாலின திருமணம் தொடர்பாக மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்,  தனிநபரின் வாழ்க்கை, அவர்களின் அந்தரங்க நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை. இதில் எந்த குழப்பமும் வேண்டாம். அதேவேளையில், திருமணம் என்பது கொள்கை சார்ந்த விஷயம் என தெரிவித்தார்.

இடஒதுக்கீடுக்கு ஆர்.எஸ்.எஸ். ஆதரவு.. சமத்துவமின்மையை அனுபவிக்கும் வரை அது தொடர வேண்டும்.. தத்தாத்ரேயா ஹோசபலே

இந்நிலையில் ஒரே பாலின திருமணம் தொடர்பான மத்திய அரசின் கருத்துடன் சங்கம் உடன்படுகிறது என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே பேட்டி ஒன்றில் கூறியதாவது: எதிர் பாலினத்தவர்களுக்கிடையே மட்டுமே திருமணம் நடக்க முடியும். ஒரே பாலின திருமணம் குறித்து அரசாங்கத்தின் கருத்துடன் சங்கம் உடன்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பை  ராகுல் காந்தி விமர்சனம் செய்தது குறித்து கருத்து தெரிவிக்க எந்த காரணமும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

எதிர்மறையான வளர்ச்சியில் பொருளாதாரம்…….வெட்கமில்லாத ஆர்.எஸ்.எஸ்…… ப.சிதம்பரம் தாக்கு

அவர்கள் தங்கள் சொந்த அரசியல் கொள்கையை பின்பற்றுகிறார்கள். ஆர்.எஸ்.எஸ்.-ன் உண்மை நிலை அனைவருக்கும் தெரியும். ஒரு முக்கிய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தி அதிக பொறுப்பை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி அண்மையில் லண்டனில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ஆர்.எஸ்.எஸ். ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பு. இது நாட்டின் அமைப்புகளை கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயக போட்டியின் தன்மையை மாற்றியுள்ளது என தெரிவித்து இருந்தார்.