மாதம் தோறும் தமிழர்கள் செய்யும் வீண் செலவு ரூ.5 ஆயிரம் கோடி – ஆய்வுத் தகவல்

மாதம் தோறும் தமிழர்கள் செய்யும் வீண் செலவு ரூ.5 ஆயிரம் கோடி – ஆய்வுத் தகவல்

இந்திய மாநிலங்கள் முழுவதிலும் புகைலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் பற்றிய ஆய்வை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் டாடா சமூக அறிவியல் மையம் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வின்படி தமிழகத்தில் கடந்த 2010 ல் புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 16.2 சதவீதமாக இருந்தது.

மாதம் தோறும் தமிழர்கள் செய்யும் வீண் செலவு ரூ.5 ஆயிரம் கோடி – ஆய்வுத் தகவல்

அதுவே 2017-ல் தமிழகத்தில் புகையிலை பயன்படுத்து வோரின் எண்ணிக்கை 16.2 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரித்தது.
இதில் சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 6 சதவீதத்திலிருந்து 6.3 சதவீதமாகவும், ‘கைனி’ பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 0.5 சதவீதத்தில் இருந்து 2.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதும் தெரியவந்தது..
கடந்த 2010-ல் தமிழகத்தில் மாதந்தோறும் சிகரெட் வாங்குவதற்காக

மாதம் தோறும் தமிழர்கள் செய்யும் வீண் செலவு ரூ.5 ஆயிரம் கோடி – ஆய்வுத் தகவல்

சராசரியாக செலவிடப்படும் தொகை ரூ.986.2 கோடியாக இருந்தது. அந்தத் தொகையானது சமீபத்தில் ரூ.1,345 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல, பீடிக்காக மாதந்தோறும் சராசரியாக செலவிடப்படும் தொகை ரூ.243 கோடியில் இருந்து ரூ.525 கோடியாக அதிகரித்துள்ளது.
இதில் விசேஷம்..! முதல் முறையாக பீடி, சிகரெட் குடிக்கத் தொடங்குவோரின் வயது முன்பு தமிழகத்தில் 18 ஆக இருந்தது. அது தற்போது 20.6 ஆக மாறியுள்ளதும் தெரியவந்துள்ளது.

மாதம் தோறும் தமிழர்கள் செய்யும் வீண் செலவு ரூ.5 ஆயிரம் கோடி – ஆய்வுத் தகவல்

அதே சமயத்தில் இன்னொரு வேதனையான விஷயம், புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கர்நாடகாவில் 28.2-லிருந்து 22.8 சதவீதமாகவும், கேரளாவில் 21.4-லிருந்து 12.7 சதவீதமாகவும், புதுச்சேரியில் 15.1-லிருந்து இருந்து 11.2 சதவீதமாகவும் குறைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் அதிகரித்து வருவதுதான்.

மாதம் தோறும் தமிழர்கள் செய்யும் வீண் செலவு ரூ.5 ஆயிரம் கோடி – ஆய்வுத் தகவல்

இதே போல் தமிழகத்தில் ஆண்டுக்காண்டு மது விற்பனையும் உயர்ந்து கொண்டே போகிறது.கடந்த ஆண்டு கணக்குப்படி, மாதம் ஒன்றுக்கு தமிழர்கள் ரூ 3 ஆயிரம் கோடிக்கு மது வங்கி குடித்துள்ளனர். இந்தியாவின் மொத்த மதுபான நுகர்வில் 13 சதவிகித மதுபானத்தை நம் தமிழர்கள் மட்டுமே வாங்கிக் குடிக்கிறார்கள். பீடி,,சிகரெட், மது குடிக்கும் இவர்கள் எல்லோரும் என்று திருந்துவார்கள் என்பதே நாட்டின் நல்ல குடிமகன்களின் கவலையாக இருக்கிறது.