பந்தயத்தில் தோல்வி - YSRCP நிர்வாகி மர்ம மரணம்!

 
tn

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் YSR காங்கிரஸ் ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெறுவார் என ஆந்திராவின் எலுரு மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதான ஜக்கவரபு வேணுகோபாலரெட்டி என்பவர் 30 கோடிக்கு பந்தயம் கட்டி இழந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணமடைந்துள்ளார்.

Chandrababu Naidu proposes to establish a music university and a national award in commemoration of SPB

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 12-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

jagan mohan reddy

இந்நிலையில் ஆந்திராவில் ஜெகன் மோகன் மீண்டும் வெற்றி பெறுவார் என ரூ. 30 கோடி பந்தயம் கட்டிய விஜயவாடாவை சேர்ந்த YSR காங்கிரஸ் நிர்வாகி வேணுகோபால் மர்ம மரணமடைந்துள்ளார். படுதோல்வியால் பந்தயம் கட்டியவர்கள் வேணுகோபால் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்ற நிலையில், மறுநாள் மாந்தோப்பில் வேணுகோபாலின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் கடும் நிதி நெருக்கடிக்கு ஆளாகி கிராமத்தை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.