ஆம்பன் புயல்: மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி – பிரதமர் மோடி அறிவிப்பு

 

ஆம்பன் புயல்: மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி – பிரதமர் மோடி அறிவிப்பு

கொல்கத்தா: ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க மாநிலத்திற்கு பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மேற்கு வங்கம், ஒடிசா, வங்கதேசம் ஆகிய மாநிலங்களை ஆம்பன் புயல் அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மேற்கு வங்கத்தின் சுந்தரவனக்காடு பகுதியில் ஆம்பன் புயல் கரையை கடந்தது. கடந்த இரண்டு தசாப்தங்களில் வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி புயலாக ஆம்பன் கருதப்படுகிறது. நாட்டின் கிழக்கு கடற்கரையிலும், வங்கதேசத்திலும் ஆம்பன் புயல் பேரழிவை ஏற்படுத்தி சென்றதுடன் பலரை பலியாக்கி உள்ளது. ஆம்பன் புயல் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பாய்ந்தது. அத்துடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆம்பன் புயல்: மேற்கு வங்கத்திற்கு ரூ.1000 கோடி நிதி – பிரதமர் மோடி அறிவிப்பு

ஆம்பன் புயலால் வங்கதேசத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்திலும் 72 பேர் ஆம்பன் புயலால் பலியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். ஆம்பன் புயலால் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடாக மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஆம்பன் புயலால் ஏற்பட்டுள்ள சேதத்தை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிட்டார். இதையடுத்து புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய மேற்கு வங்க அரசுக்கு ரூ.1000 கோடி நிவாரண நிதியை பிரதமர் மோடி அறிவித்தார். அத்துடன் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்று அவர் கூறினார்.