“கொரோனா மரணங்களை விட சாலை விபத்து மரணங்கள் அதிகம்”

 

“கொரோனா மரணங்களை விட சாலை விபத்து மரணங்கள் அதிகம்”

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் சாலை விபத்தால் உயிரிழக்கின்றனர். இது கொரோனா மரணத்தை விட அதிகம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

வாகன விபத்து பாதுகாப்பு பற்றிய காணொளி கருத்தரங்கு இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா உட்பட வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் சாலை விபத்துகள் அதிகமாக நடக்கிறது. ஆண்டுக்கு 1.5 லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். இது கொரோனா மரணத்தை விட அதிகம். வரும் 2030ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்து ஏற்படாத அளவுக்கு இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்கு. சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60% பேர் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள். அதற்குத்தான் பாதுகாப்பு அதிகமாக தேவைப்படுகிறது என்று கூறினார்.

“கொரோனா மரணங்களை விட சாலை விபத்து மரணங்கள் அதிகம்”

தொடர்ந்து பேசிய அவர், சாலை பொறியியல் தொழில் நுட்பமும் வாகன பொறியியல் தொழில் நுட்பமும் மேம்படுத்தப்பட்டுள்ளது. விபத்து நிகழாமல் இருக்க வாகன ஓட்டிகளுக்கு மேம்பட்ட பயிற்சி அவசியம். நல்ல சாலைகளை உருவாக்கி விபத்துக்களை தடுப்பது அரசின் கடமை. அரசின் இந்த இலக்கை அடைய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் தெரிவித்தார்.