பாபர் மசூதி வழக்கில் அத்வானியை விடுதலை செய்த நீதிபதிக்கு தேடிவந்த பதவி!

 

பாபர் மசூதி வழக்கில் அத்வானியை விடுதலை செய்த நீதிபதிக்கு தேடிவந்த பதவி!

அயோத்தியிலிருந்து பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இந்து கர சேவகர்கள் இடிக்கப்பட்டது. விஷ்வ ஹிந்து பரிஷத், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) பாரதிய ஜனதா கட்சி, சிவசேனை உள்ளிட்ட இந்துத்வ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்திய பேரணிக்காக அங்கு பல ஆயிரம் முதல் சில லட்சம் பேர் வரை கூடியிருந்தனர்.

பாபர் மசூதி வழக்கில் அத்வானியை விடுதலை செய்த நீதிபதிக்கு தேடிவந்த பதவி!

அவர்களைத் தூண்டிவிட்டு மசூதியை இடிக்கச் சதி செய்தது, சமூகக் குழுக்களுக்கு இடையே மோதலை உண்டாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் எல்கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட இந்துத்துவ தலைவர்கள் 48 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. வழக்கு விசாரணையின்போதே 16 தலைவர்கள் இறந்துவிட்டதால், 32 பேர் மீதான விசாரணை நடைபெற்று வந்தது.

பாபர் மசூதி வழக்கில் அத்வானியை விடுதலை செய்த நீதிபதிக்கு தேடிவந்த பதவி!

இந்த வழக்குகளை விசாரித்தவர் சுரேந்திர குமார் யாதவ். கடந்த ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை வாசித்த அவர், 32 பேரும் குற்றமற்றவர்கள் என்றும், சிபிஐ ஆதாரங்கள் வலுவாக இல்லை என்றும் கூறினார். இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. இதற்குப் பின் சமீபத்தில் ஓய்வுபெற்றார். இச்சூழலில் உத்தரப் பிரதேச மாநில லோக் ஆயுக்தாவில் துணை தலைவராக (3ஆவது துணைத் தலைவர்) சுரேந்திர யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார். பல்வேறு அரசு அதிகாரிகள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார். அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று கூறப்பட்டுள்ளது.