விபத்துகளில் உயிரிழக்கும் 38% இளைஞர்கள் - தற்கொலையால் 16% இளைஞர்கள் உயிரிழப்பு!
இந்தியாவில் சாலை விபத்துக்களால் 38 சதவீத இளைஞர்களும், தற்கொலையால் 16 சதவீத இளைஞர்களும் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்க காரணமானது எவை என்பது தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த புள்ளி விவரங்களின் படி, இந்தியாவில் சாலை விபத்துக்களால் 38 சதவீத இளைஞர்கள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 38% இளைஞர்கள் சாலை, பிற விபத்துகளில் இறப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 15-29 வயது இளைஞர்களில் 38% பேர் தடுக்கக்கூடிய விபத்துகளில் உயிரிழக்கின்றனர். 26% பேர் சாலை விபத்துகளிலு, 12% பிற விபத்துகளிலும் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதேபோல் தற்கொலையால் 16 சதவீத இளைஞர்கள் உயிரிழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் இளைஞர்கள் உயிரிழப்புக்கு 16 சதவீதம் தற்கொலை காரணமாகிறது என கூறப்பட்டுள்ளது. இதேபோல் 9 சதவீதம் பேர் இதய ரத்தக்குழாய் பாதிப்புகளால் உயிரிழப்பது, 7 சதவீதம் பேர் செரிமான நோய்களால் உயிரிழப்பதும் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.