பாஜக வாக்குச்சாவடி பிரமுகர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

 
suicide

கர்நாடகாவில் பாஜக வாக்கு சாவடி பிரமுகர் தூக்கில் தொங்கியபடி சடலமாக அமைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

election

கர்நாடக சட்டப்பேரவை 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த மே 10ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

suicide

இந்நிலையில் கர்நாடகாவில் வாக்குப்பதிவின்போது கலப்புராகி மாவட்டத்தின் சிஞ்சோடி தாலுகாவில் உள்ள சலகர்பசந்த் ஊர் கிராமத்தில் தூக்கில் தொங்கி நிலையில் ஒருவர் காணப்பட்டார் . இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணையை தொடங்கினர்.  இதில் இறந்தவர் பெயர் ராமு ரத்தோட் என்றும் இவர் மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலில், பாஜகவின் வாக்கு சாவடி முகவராக பணியாற்றியதும் தெரியவந்தது.  இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது கொலையாக இருக்கலாம் என்று என்றும் அவரின் மனைவி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.