‘ஓடிடியில் 13+. 16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும்’ – மத்திய அரசு

 

‘ஓடிடியில் 13+. 16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும்’ – மத்திய அரசு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருக்கெடுத்து வரும் இக்காலக்கட்டத்தில், குற்றங்கள் நடைபெறுதில் முக்கிய பங்கு வகிப்பது சமூக வலைதளங்கள். அதில் பரப்பப்படும் அவதூறு தகவல்களையும், ஆபாசங்களையும் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தது.

‘ஓடிடியில் 13+. 16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும்’ – மத்திய அரசு

அதையேற்ற மத்திய அரசு, சமூக வலைத்தளங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதில், சமூக வலைத்தளங்களை அவதூறுகள், வதந்திகளை பரப்புவதற்காக பயன்படுத்துவதை ஏற்கமுடியாது. புகாரளித்த 24 மணி நேரத்திற்குள் பெண்கள் குறித்து ஆபாச படங்களை சமூக வலைதளம் நீக்க வேண்டும். புகார்களை கையாள்வதற்காக ஒவ்வொரு சமூக வலைதள நிறுவனங்களும் தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தவறான தகவலைப் பரப்பக்கூடிய நம் முதல் நபர் யார் என்ற விஷயத்தை சமூக வலைத்தளங்கள் கண்டறிய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

‘ஓடிடியில் 13+. 16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும்’ – மத்திய அரசு

மேலும், அரசு அல்லது நீதிமன்றம் தகவல்களை கேட்டால் சமூக வலைத்தளங்கள் நிச்சயம் வழங்க வேண்டும். இல்லையெனில் 5 ஆண்டுகளோ அதற்கு மேலோ சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது அவசியமாகிறது என்றும் ஓடிடியில் 13+, 16+, அடல்ட் என வகைப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.