கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை

 
கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை

கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.

KH 234' titled 'Thug Life': Kamal Haasan looks supreme in Mani Ratnam's  directorial | Tamil Movie News - The Times of India

தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று நடிகர் கமலஹாசன் கூறியதை அடிப்படையாக வைத்து கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துக்கு 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை நேற்று கெடு விதித்தது. மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்தது. 

தவறு இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் இல்லையெனில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிய நிலையில், கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.