மெட்ரோ ரயில்களில் ரீல்ஸ் வீடியோ எடுக்க தடை

 
metro

டெல்லி மெட்ரோ ரயில்களில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரீல்ஸ் / டான்ஸ் வீடியோக்கள் எடுக்க மெட்ரோ நிர்வாகம் தடை விதித்துள்ளது.

மெட்ரோ வளாகத்தில் ரீல்ஸ் -சித்தரிப்புக்கானது

இந்தியாவில் ரீல்ஸ் எனப்படும் டப்ஸ் மேசில் பிரபலமடைந்த ஒரு செயலிதான் டிக் டாக். இது இந்தியாவில் பல மில்லியன் பயனர்களை கொண்டு இயங்கி வந்த நிலையில், இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு கடந்த 2020-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மோஜ், டாக்கா டாக் உள்ளிட்ட பல்வேறு செயலிகள் டிக் டாக்கிற்கு மாற்றாக களமிறக்கப்பட்டன. இந்த செயலிகள் மூலம் பொது இடங்களில் ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் அல்லது சமூக வலைதளங்களில் பகிர்வது இளசுகளின் ட்ரெண்டாக மாறியுள்ளது. 

இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில்களில் இன்ஸ்டா ரீல்ஸ் உள்ளிட்ட வீடியோக்களை எடுக்க தடை மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சக பயணிகளுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் ரீல்ஸ் வீடியோ எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி மெட்ரோ நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள மக்கள், நாட்டின் இதர மெட்ரோ ரயில்களிலும் இந்த உத்தரவு அமலாக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.