ரூ.3.62 லட்சம் கோடி மதிப்பு ரூ.2,000 நோட்டு புழக்கம்- மத்திய அரசு

 
2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

ரிசர்வ் வங்கி சட்டம், 1934 பிரிவு 24(1)-ன் கீழ் 2016 நவம்பரில் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் முதன்மை நோக்கம் அப்போது புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்ட பிறகு, பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்வதாகும், மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைத்தவுடன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியது. அதனால், 2018-19-ல், 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி நிறுத்தம்: மீண்டும் 'செல்லாக்காசு'  அறிவிப்பு வருமோ...!

2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளில் சுமார் 89% 2017 மார்ச் மாதத்திற்கு முன்பு வெளியிடப்பட்டன. புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, 2018 மார்ச் 31 அன்று ரூ.6.73 லட்சம் கோடியாக (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) இருந்த நிலையில் 2023 மார்ச் 31 அன்று ரூ.3.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே ஆகும். இந்த ரூபாய் நோட்டுகளை மக்கள் பொதுவாக பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்துவதில்லை. மேலும், பொதுமக்களின் நாணயத் தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் க்ளீன் நோட்டு கொள்கையின் படி, ரூ.2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும். ரிசர்வ் வங்கி 2013-2014 ஆம் ஆண்டில் இதேபோன்று ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Rs 2,000 notes withdrawn from circulation, read what RBI has to say - India  Today

பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம் அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம். வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது தற்போதைய அறிவுறுத்தல்கள் மற்றும் பிற பொருந்தக்கூடிய சட்ட விதிகளுக்கு உட்பட்டது. வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, 2023 மே 23 முதல் எந்த வங்கியிலும் ரூ.20,000/- வரையிலான 2,000 ரூபாய் நோட்டுகளை மற்ற மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம்.

ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறும் ரிசர்வ் வங்கி - சந்தேகங்களும்  விளக்கமும் - BBC News தமிழ்

பொதுமக்களுக்கு போதுமான அவகாசம் வழங்கும் வகையில், அனைத்து வங்கிகளும் 2023 செப்டம்பர் 30 வரை ரூ.2000 நோட்டுகளை டெபாசிட் அல்லது மற்ற நோட்டுகளாக மாற்றும் வசதியை வழங்க வேண்டும். வங்கிகளுக்கு தனி வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000/- வரை மாற்றுவதற்கான வசதி 2023 மே 23 முதல் ரிசர்வ் வங்கியின் 19 கிளை அலுவலகங்களும் வழங்கப்படும். 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும்/அல்லது மாற்றுவதற்கும் 2023 செப்டம்பர் 30-ம் தேதி வரையிலான அவகாசத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த விவகாரத்தில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) பற்றிய ஆவணம் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தகவலுக்காகவும்,  பொதுமக்களின் வசதிக்காகவும் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.