ரூ.2000 நோட்டுகளை வாபஸ் பெறுவதில் எந்த பிரச்சினையும் இல்லை - சக்திகாந்த தாஸ்

 
Sakthi Gandha das

வங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டு வாபஸ் பணிகள் சிக்கலின்றி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். 

2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து படிபடியாக குறைந்து வரும் நிலையில், முற்றிலுமாக 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2,000 ரூபாய் நோட்டு வாபஸ் பணிகள் சிக்கலின்றி நடைபெற்று வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:  2,000 ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான அனைத்து பணிகளும் சிக்கலின்றி நடக்கும். அதுதொடர்பாக ஏற்கனவே ஆய்வு செய்துள்ளோம். இதுவரை எந்த பெரிய பிரச்சினையும் இல்லை. ரிசர்வ் வங்கி வழக்கம்போல் நிலைமையை கண்காணித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.