#BREAKING செப். 30 வரையே 2000 ரூபாய்‌ நோட்டுகள் செல்லும்- ரிசர்வ் வங்கி

 
2000 ரூபாய் நோட்டு

நாட்டில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

2000 ரூபாய் நோட்டு குறித்து எழும் வதந்திகள் உண்மையல்ல: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

rbi

2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தர்போது திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. புழக்கத்திலிருந்து நீக்கப்பட்டாலும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூபாய் 2000 நோட்டுகள் செல்லும்.என்பது குறிப்பிடதக்கது.