ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ- டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு

 
ராஷ்மிகா

டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவை ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் டெல்லி போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. 

அதே சமயம் டீஃப் ஃபேக் மூலம் நடிகை ராஷ்மிகா மந்தனாவை ஆபாசமாக சித்தரித்து வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவுகளில் டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலி வீடியோ தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து டெல்லி போலீஸ் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா போலி வீடியோ - மத்திய அரசு எச்சரிக்கை

முன்னதாக பெண்களை ஆபாசமாக சித்தரித்து DEEP FAKE வீடியோ வெளியிட்டால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற போலி வீடியோக்கள் தொடர்பாக சமூக வலைதள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

முன்னதாக ராஷ்மிகா மந்தனா மார்ஃபிங் வீடியோ விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லி காவல்துறைக்கு அம்மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.