ஊழலை குணப்படுத்த முடியாது என்றார் ராஜீவ் காந்தி, ஊழலுக்கு நிச்சம் மருந்து உண்டு என்று மோடி நம்புகிறார்.. ராஜ்நாத் சிங்

 
ராஜீவ் காந்தி

ஊழலை குணப்படுத்த முடியாது என்று கூறிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போலல்லாமல் ஊழலுக்கு நிச்சயம் மருந்து உண்டு என்று பிரதமர் மோடி நம்புகிறார் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள நந்த்காட் கிராமத்தில் பா.ஜ.க.வின் இரண்டாவது விஜய் சங்கல்ப் ரத யாத்திரையை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நடைபெற்ற பேரணியில் ராஜ்நாத் சிங் பேசுகையில் கூறியதாவது: ஒவ்வொரு நாளும் காங்கிரஸின் இளம் தலைவர்கள் ஏவப்படுகிறார்கள். மோடிஜி உங்கள் கல்லறை தோண்டப்படும் என்று சொல்லுமளவிறகு் தரம் தாழ்ந்து விட்டார்கள். அவர்களே தங்கள் சவக்குழிகளை தோண்டிக் கொள்கிறார்கள். காங்கிரஸ் எவ்வளவு சேற்றை வீசுகிறதோ, அவ்வளவு தாமரை மலரும். 

ராஜ்நாத் சிங்

ஊழலை குணப்படுத்த முடியாது என்று கூறிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை போலல்லாமல் ஊழலுக்கு நிச்சயம் மருந்து உண்டு என்று பிரதமர் மோடி நம்புகிறார். காங்கிரஸ் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடத்தினார்கள். பாரதம் (இந்தியா) எங்கே உடைந்தது என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன். அவர்கள் (காங்கிரஸ்) அரசியல் மட்டுமே செய்கிறார்கள். எடியூரப்பாஜி பல தசாப்தங்களாக மண்ணின் மகனான கட்சிக்கும் மாநிலத்துக்கும் சேவை செய்துள்ளார். பிரதமர் மோடியைப் போலவே எடியூரப்பாவுக்கும் அதே ஆசை, கர்நாடகாவில் ஐந்தாண்டுகளுக்கு மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும். 

பி.எஸ்.எடியூரப்பா

இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மாநிலத்தை தென்னிந்தியாவின் முதல் மாநிலமாக மாற்ற முடியும். எடியூரப்பா ஜி இப்போது மிக முக்கியமான நாடாளுமன்ற குழுவில் இருக்கிறார். கர்நாடகாவுக்கு எடியூரப்பா செய்த சேவைகளை கட்சியால் மறக்க முடியாது. எடியூரப்பா உடல் நலம் தொடர்பான பிரச்சினைகளால் முதல்வர் பதவியில் இருந்து விலக நேரிட்டது. மாநிலத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பா.ஜ.க. ஆட்சி அமைக்க மக்கள் சங்கல்ப் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.