சந்திரபாபு நாயுடு மகனுடன் ரஜினி உரையாடல்

சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் 2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி அவரை ஆந்திர போலீசார் அவரை கைது செய்தனர். வருக்கு செப்.22 வரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கி விஜயவாடா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷுடன் நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசியில் உரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் சந்திரபாபு நாயுடுவை தனது சிறந்த நண்பர் மற்றும் போராளி எனக் கூறி அறிமுகப்படுத்திய ரஜினிகாந்த், மக்கள் நலனுக்காக எப்போதும் போராடுபவர் சந்திரபாபு என, பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது என ஆறுதல் கூறியதாகவும் அவரது நற்செயல்களும், தன்னலமற்ற பொது சேவையும் சிறையிலிருந்து அவரை பத்திரமாக வெளியே கொண்டுவரும் என ஆறுதல் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக தென்னிந்திய சூப்பர் ஸ்டாரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் வியாழக்கிழமை சிறையில் சந்திரபாபு நாயுடுவை சந்திக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.