திருப்பதியில் பிரபல யூடியூபர் கைது! பரபரப்பு பின்னணி
Apr 16, 2025, 16:30 IST1744801209000

திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்டதற்காக யூடியூபரை விஜிலென்ஸ் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த அன்ஷுமான் தரேஜா என்ற யூடியூபர் நேற்று மாலை ஏழுமலையான் கோயிலுக்கு எதிரே உள்ள ஹரிநாம சங்கீர்த்தனை மண்டபத்தில் இருந்து ட்ரோனை கேமிராவை பறக்கவிட்டு வீடியோ பதிவு செய்தார். இதனை கவனித்த தேவஸ்தான விஜிலென்ஸ் பணியாளர்கள் உடனடியாக அவரை பிடித்து, ட்ரோன் கேமிராவை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.