வேற்று மதத்தவர் கோயிலுக்குள் நுழைந்தால் அதன் தெய்வீகத்தன்மை இழந்து விடும் அளவுக்கு நம் மதம் பலவீனமானதா?... ராஜ் தாக்கரே

 
மின் கட்டணத்தை குறைக்க நிறுவனங்கள் தயார்… ராஜ் தாக்கரே தகவல்

திரிம்பகேஷ்வர் கோயில் பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தால் அதன் தூய்மையும் தெய்வீகத்தன்மையையும் இழந்து விடும் அளவுக்கு நமது மதம் பலவீனமானதா? என்று ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பினார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் திரிம்பகேஷ்வர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் தர்காவும் உள்ளது. கடந்த 13ம் தேதியன்று இரவு வேற்று மதத்தை சேர்ந்த ஒரு குழுவினர் தர்காவுடன் தொடர்புடைய ஒரு பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக திரிம்பகேஷ்வர் கோயிலுக்குள் நுழைய முயன்றனர். ஆனால் கோயில் காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியதால், தளு்ளுமுள்ளு ஏற்பட்டது. கோயில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், இந்திய தண்டனை  சட்டம் பிரிவு 295ன் கீழ் நான்கு பேர் மீது போலீசார் எஃப்.ஐ. ஆர். பதிவு செய்தனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக  விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை மகாராஷ்டிரா அரசு அமைத்தது.

திரிம்பகேஷ்வர் கோயில்

திரிம்பகேஷ்வர் கோயில் பிரச்சினை தொடர்பாக மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கூறியதாவது: திரிம்பகேஷ்வரில் உள்ள பிரச்சினை உள்ளூர்வாசிகளின் பிரச்சினை, அவர்கள் ஒரு முடிவை எடுக்க வேண்டும். வெளியாட்கள் தலையிடக் கூடாது. பல ஆண்டுகளாக ஒரு பாரம்பரியம் இருந்தால், அதை தடுப்பது சரியல்ல. வேற்று மதத்தை சேர்ந்த ஒருவர் கோயிலுக்குள் நுழைந்தால் அதன் தூய்மையும் தெய்வீகத்தன்மையையும் இழந்து விடும் அளவுக்கு நமது மதம் பலவீனமானதா?. நாட்டில் பல கோயில்கள் மற்றும் மசூதிகள் உள்ளன, அங்கு மக்களிடையே (பல்வேறு நம்பிக்கைகள்) பரஸ்பர புரிதல் உள்ளது.

எப்.ஐ.ஆர்.

மும்மை மாஹிம் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் மஹிம் தர்காவில் சதர் வழங்குகிறார்கள்.மறுபுறம் நம் சில கோயில்களில் ஒரு குறிப்பிட்டத சாதியை சேர்ந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். நானும் மசூதிகள் மற்றும் தர்காவுக்கு சென்றுள்ளேன். தவறான விஷயங்களை தாக்குவது சரிதான். இருப்பினும் வேண்டுமென்றே எதையும் செய்வது (விவாதத்தை உருவாக்குவது) சரியல்ல. மராத்தி முஸ்லிம்கள் வாழும் இடத்தில் கலவரம் நடக்காது. இந்துக்களும், முஸ்லிம்களும் இடையே நல்லுறவு, பரஸ்பர புரிந்துணர்வு உள்ளது, அதை மக்கள் தொந்தரவு செய்யக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.