“திட்டமிட்டு பேசவிடாமல் தடுத்தனர்” - ராகுல் காந்தி

 
ச் ச்

மக்களவையில் நான் பேசுவதை தடுப்பது ஒரு திட்டமிட்ட முயற்சி என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி எழுதியுள்ள கடிதத்தில், “மக்களவையில் நான் பேசுவதை தடுப்பது ஒரு திட்டமிட்ட முயற்சி. என்னை பேசவிடாமல் தடுப்பது மரபை மீறுவதாகும். எதிர்க்கட்சி தலைவரான என்னை மத்திய அரசின் அழுத்தத்தால் சபாநாயகர் பேசவிடவில்லை. இது தீவிர கவலையை ஏற்படுத்தி உள்ளது. குடியரசு தலைவர் உரையின் ஒரு முக்கிய பகுதி தேசிய பாதுகாப்பு. அது குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான விஷயங்களில் நான் பேசுவதை தடுக்க முயற்சிக்கின்றனர். இதுகுறித்து பேசுவதை தடுக்க சபாநாயகர் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டிருப்பது முன்னெப்போதும் இல்லாத சூழலுக்கு வழிவகுத்துள்ளது. அரசின் தூண்டுதலால் குடியரசுத் தலைவர் உரை விவாதத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. இது ஜனநாயகம் மீதான கறையாகும். இதற்கு எனது கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். பேசுவதற்கான உரிமை நமது ஜனநாயகத்திற்கு இன்றியமையாதது” எனக் குறிப்பிட்டுள்ளார்.