“குண்டுவெடிப்பு செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்”- ராகுல்காந்தி

 
s s

டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்ப செய்தியை அறிந்ததும் மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு நடந்தது. இதில் அங்கிருந்த சில வாகனங்கள் இந்த வெடிப்பால் தீப்பிடித்துள்ளன. தகவலறிந்தவுடன் 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. மேலும் காவல் உயரதிகாரிகள், NIA அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். கார் வெடித்துச் சிதறியதில் மேலும் சில வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக டெல்லி தீயணைப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லி கார் குண்டு வெடிப்பில் 10 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.