நம்பிக்கையோடு இருங்கள்! இந்தியா வெல்லும்- ராகுல்காந்தி

 
ராகுல்காந்தி

நாட்டின் அரசியல் அமைப்பு சாசனத்தைக் காப்பாற்ற உறுதியாக நின்ற அனைத்துத் தலைவர்களுக்கும், கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “காங்கிரஸ் ஆட்சி அமையப்போகிறது என்பதை நான் நம்பிக்கையுடன் கூறுகிறேன். நாட்டின்  அரசியல் அமைப்பு சாசனத்தை காப்பாற்ற உறுதியாக நின்ற அனைத்து தலைவர்களுக்கும், கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடைசி நேரம் வரை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்கு இயந்திரங்களை வைத்துள்ள அறைகளைக் கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.


மக்களவைத் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளான இன்று நாட்டு மக்கள் அனைவருக்கும் வணக்கம் செலுத்தி, இந்தியாவில் புதிய அரசு அமையப்போகிறது என்பதை காங்கிரஸ் தொண்டர்களுக்கு நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் அரசியலமைபுச் சட்டம் மற்றும் நிர்வாகத்தை காப்பாற்ற உறுதியாய் நின்ற இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. பிரதமரின் தவறான திசை திருப்பல் முயற்சிகளுக்கு மத்தியிலும், மக்களின் உண்மையான பிரச்சனைகளில் கவனம் செலுத்தி விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் குரல்களை உயர்த்தி நாம் வெற்றி கண்டுள்ளோம். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் வாழ்க்கை தரத்தையும் மாற்றும் புரட்சிக்கரமன உத்திரவாதங்களை பொதுமக்கள் முன் நாம் எடுத்து கூறியதோடு அதனை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பரப்பியுள்ளோம். இறுதிவரை வாக்குச்சாவடிகள் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை கண்காணிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.