மோடிக்காகவே ராமர் கோயில் விழா வடிவமைக்கப்பட்டிருக்கிறது- ராகுல்காந்தி

 
கோவிட்-19 சோதனை கருவிகளை அரசுக்கு வழங்குவதில் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.. பிரதமர் தலையிட ராகுல்காந்தி கோரிக்கை….

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நரேந்திர மோடியின் அரசியல் விழா என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Highlights: PM Narendra Modi Ayodhya Ram Temple Ram Mandir Pran Pratishtha  Consecration Temple

அயோத்தி ராமர் கோவிலில் வரும் 22ஆம் தேதி குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்கும் வகையில், நாட்டின் முக்கிய பிரமுகர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் ஸ்ரீ  ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை அழைப்பு விடுத்து வருகிறது. அரசியல் தலைவர்கள்,  தொழிலதிபர்கள், செல்வந்தர்கள், திரை  பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளிட்டோருக்கு நேரடியாக அழைப்பிதழ் வழங்கும் பணி  நடைபெற்று வந்தாலும், அதே சமயம் நேரில் காண வாய்ப்பில்லா மக்கள் நேரடியாக விழா சம்பவங்களை காணும் வசதியும் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.  

இந்நிலையில் நாகாலாந்தின் தலைநகர் கோஹிமாவில் நடந்த பாரத் ஜோடோ யாத்திரையின் போது பேசிய ராகுல்காந்தி, “ராமர் கோயில் திறப்பு விழாவை பாஜகவும், ஆர்.எஸ்.எஸும் மோடியின் அரசியல் விழாவாகவே மாற்றிவிட்டன. இந்து மடாதிபதிகளும் இதே கருத்தைத்தான் தெரிவித்திருக்கின்றனர். அனைத்து மதத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கூடியது காங்கிரஸ் கட்சி. எனவே பிரதமர் மோடியை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு அரசியல் விழாவில் காங்கிரஸால் பங்கேற்க முடியாது” என்றார்.