"வாழ்க்கையில் அடுத்தடுத்து பேரிழப்புகள்..."- ராகுல்காந்தி உருக்கம்

 
"வாழ்க்கையில் அடுத்தடுத்து பேரிழப்புகள்..."- ராகுல்காந்தி உருக்கம் 

சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் தந்தையின் மறைவை ராகுல் காந்தி நினைவுகூர்ந்தார். 

மேடையில் பேசிய ராகுல்காந்தி. "எங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மிகப்பெரிய இழப்புகள் நிகழ்ந்தன. எங்களுக்கு வழிகாட்டியாக இருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பின்னர், எங்களின் மிகப்பெரிய வழிகாட்டியான எனது தந்தையும் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். அப்பாவின் மறைவு குறித்து அம்மாவுக்கு எதுவுமே நினைவில் இல்லை.. அழகான வாழ்க்கையும் ஆழமான காதலும் ஒரே நாளில் முடிந்துவிட்டன. சோனியா என் தந்தைக்குச் சொந்தமானவர்; என் தந்தை அவருக்குச் சொந்தமானவர். அதன்பிறகு என் தந்தை காணாமல் போனார். தந்தையின் மரணம் என் தாயாரை மாற்றிவிட்டது.  உண்மையாகவே, அவரது வாழ்வின் சுடர் அணைந்துவிட்டது. என் அப்பாவும் அம்மாவும் முதன்முதலில் சந்தித்த இடத்திற்கு என் காதலியை அழைத்துச் சென்றேன். அங்கு இருவரும் ஒன்றாகச் சுற்றிப் பார்த்தோம். 

எனது பெற்றோர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சண்டையிட்டதை ஒரே ஒருமுறைதான் பார்த்தேன். அப்போது அப்பா அமரீந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அம்மா மூன்று, நான்கு முறை ஏதோ சொல்ல, அப்பா கோபமடைந்தார். அதுதான் அவர்கள் சண்டையிட்ட ஒரே சம்பவம். எனது பெற்றோர் வாக்குவாதம் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், சண்டையிட்டதை ஒரே ஒருமுறைதான் பார்த்தேன். அப்போது அப்பா அமரீந்தர் சிங்குடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அம்மா மூன்று, நான்கு முறை ஏதோ சொல்ல, அப்பா கோபமடைந்தார். அதுதான் அவர்கள் சண்டையிட்ட ஒரே சம்பவம்" என்றார்.