நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள்: ராகுல்காந்தி

 
rahul gandhi

பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுவந்து, நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

Modi vs rahul

இதுதொடர்பாக ராகுல்காந்தி் பேசுகையில், “இன்று 4ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் 3 கட்ட தேர்தலில் ஜூன் 4ம் தேதி இந்திய அரசு மாறப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. ஜூன் 4 ஆம் தேதி ஒன்றியத்தில் புதிய அரசு அமையப் போகிறது என்பது முதல் மூன்று கட்டங்களில் தெளிவாக தெரிந்துவிட்டது. நினைவில் கொள்ளுங்கள், உங்களின் ஒவ்வொரு வாக்கும்  ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பது மட்டுமன்றி உங்கள் முழு குடும்பத்தின் தலைவிதியையும் மாற்றும். 1 வாக்கு=  முதல் முறை வேலைவாய்ப்பை பெறவுள்ள இளைஞர்களுக்கு ஆண்டிற்கு ரூ. 1 லட்சம் ஊதிய உத்தரவாதம். 1 வாக்கு= ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் ஆண்டிற்கு ரூ.1 லட்சம்

எனவே, பொதுமக்கள் அதிக அளவில் திரண்டுவந்து, நாட்டில் உள்ள பிரச்னைகளின் அடிப்படையில் வாக்களியுங்கள் -அந்த பிரச்னைகளை திசைதிருப்பமுடியாது என்பதைக் காட்டுங்கள். உத்தரப் பிரதேசத்தில் இந்தியக் கூட்டணியின் புயல் வீசுகிறது... உத்தரப் பிரதேசத்தில் பாஜக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கப் போகிறது, இதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வமாக  எழுதி தருகிறேன்... மோடி பிரதமரல்ல. அவர் ஒரு ராஜா, பொம்மை ராஜா. அவரை ஆட்டுவிக்கும் கயிறுகள், டெம்போ தொழிலாளர்களின் கையில் இருக்கின்றன” எனக் கூறியுள்ளார்.