இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை பாஜக உடைத்துவிட்டது- ராகுல்காந்தி

 
rahul

அதானி குழும முதலீடுகள் மற்றும் அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (ஏஐசிசி)

சத்தீஸ்கரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பை பாஜக உடைத்துவிட்டது. ஜிஎஸ்டி & பணமதிப்பிழப்பு சிறு வணிகர்களை அழித்துவிட்டது. மக்களை பிளவுபடுத்துவது, வன்முறையை பரப்புவது தான் பாஜகவின் வேலை. மக்களை இணைப்பது, வெறுப்பு சந்தையில் அன்பின் கடையைத் திறப்பது எங்கள் பணி. அதானி குழும முதலீடுகள் மற்றும் அதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும். அதானி குடும்பத்திடம் இருந்து 10 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான பணம் வெளிநாடுகளுக்கு சென்று பிறகு அதானி குழும்பத்தின் பங்குகளிலேயே முதலீடு செய்யப்பட்டிருக்கிறது.வெளிநாட்டை சேர்ந்தவர்கள் ஏன் இதில் சம்பந்தப்படுகிறார்க? அந்த பணம் யாருடையது? இந்த முறைகேடு விசாரிக்கப்பட வேண்டும்.

Image

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் பாஜக பல எண்ணிக்கையை முன்வைக்கும். உதாரணமாக கர்நாடகாவில் 230 இடங்கள், 250 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று சொன்னர்கள். ஆனால் கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு ஏழையும் காங்கிரஸுக்குத்தான் வாக்களித்தார்கள். சத்தீஸ்கர் , ராஜஸ்தான், கர்நாடகா, இமாச்சலப் பிரதேச அரசுகள் அல்லது தெலுங்கானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வரவிருக்கும் அரசாங்கங்கள் எதுவாக இருந்தாலும் , அவை அதானியின் அரசாங்கங்களாக இருப்பதை விட ஏழைகளின் அரசாங்கமாக இருக்கும். காங்கிரஸ் கட்சி எப்போதும் சாமானிய மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும், அவர்களின் உரிமைகளை வழங்குவதற்காகவும் செயல்படுகிறது” என்றார்.