ஆட்சியா? எதிர்க்கட்சியா? என்பது குறித்து நாளை முடிவு- ராகுல்காந்தி

 
rahulgandhi

ஆட்சி அமைக்க உரிமை கோருவதா அல்லது எதிர்க்கட்சியாக இருப்பதா என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

rahul

கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி   தொகுதியில் காங்கிரஸ் எம்பி ஆன ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் அவர் தற்போது இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளார். ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி வெற்றி அடைந்துள்ளார். 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “மக்களவைத் தேர்தல் ஒரு அரசியல் ரீதியிலான தேர்தல் கிடையாது. பாஜக மட்டுமின்றி சிபிஐ, அமலாக்க துறை போன்ற விசாரணை அமைப்புகளை எதிர்த்து நின்று வென்றுள்ளோம். அரசியல் சாசனத்தை காப்பதற்கான போராட்டம் இது. இந்தியா கூட்டணி கட்சியினர் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் நெஞ்சார்ந்த நன்றி. ஆட்சி அமைக்க உரிமை கோருவதா அல்லது எதிர்க்கட்சியாக இருப்பதா என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

rahul

ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதி மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. எந்த தொகுதியில் ராஜினாமா செய்வது என்பது குறித்து தற்போது முடிவெடுக்கவில்லை. உத்தரப்பிரதேச மக்கள் அரசியல் அறிவை கண்டு பிரம்மிக்கிறேன். I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி, குறிப்பாக உத்தரப்பிரதேச மக்களுக்கு நன்றி. அரசியலமைப்புச் சட்டத்தை காப்பாற்றியதில் உத்தரப்பிரதேச மக்களின் பங்கு அதிகம். உத்தரப்பிரதேசத்தில் I.N.D.I.A. கூட்டணி வெற்றிக்கு காங்.மூத்த தலைவர் பிரியங்கா காந்தி காரணம். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக இந்த தேர்தலை சந்தித்தோம். ஏழைகளுக்கான, தேசத்திற்கான தொலைநோக்குத் திட்டத்துடன் மக்களை அணுகினோம். பிரதமர் நரேந்திர மோடி பின்னடைவும் போது தொழிலதிபர் அதானியின் பங்கு வீழ்ச்சி அடைகிறது. ஏழை மக்களின் பணம் அதானிடம் சென்றதற்கு வேறு சான்று தேவையில்லை. எங்கள் யுக்தி என்ன என்பதை இப்போதே சொன்னால் எதிர் கட்சியினர் உஷார் ஆகி விடுவார்கள்” என்றார்.