இந்தியா கூட்டணி நிச்சயம் பாஜகவை வீழ்த்தும்- ராகுல்காந்தி

 
கோவிட்-19 சோதனை கருவிகளை அரசுக்கு வழங்குவதில் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.. பிரதமர் தலையிட ராகுல்காந்தி கோரிக்கை….

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக 28 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன.  ‘இந்தியா’ என பெயரிடப்பட்டுள்ள இந்த கூட்டணியில் முதல் 2 ஆலோசனை கூட்டங்கள் முறையே பீகார் மாநிலம் பாட்னா மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மூன்றாவது ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று மற்றும் இன்று நடைபெற்றது. 

ராகுல் காந்தி

இரண்டு நாட்கள் நடைபெற்ற கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, “இந்தியாவின் நம்பகத்தன்மையை காப்பாற்ற பிரதமர் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுகு வழங்குவதே மோடி அரசின் இலக்கு ஏழைகள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் இந்தியா கூட்டணியில் இணைய வேண்டும். மக்கள் ஒற்றுமையே இந்திய கூட்டணியின் பலம்.

தலைவர்களிடையே நல்ல புரிந்துணர்வையும், நட்புணர்வையும் இந்த கூட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன. கருத்து வேறுபாடுகளை களைந்து சிறந்த புரிதலோடு தலைவர்கள் செயல்படுகின்றனர். சுமூகமான முறையில் தொகுதிப் பங்கீட்டை நடத்தி முடிப்போம். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி பாஜகவை நிச்சயமாக வீழ்த்தும். ஏழை மக்களிடம் இருந்து பணத்தை பறித்து குறிப்பிட்ட சில தொழிலதிபர்களுக்கு வழங்குவதே மோடி அரசின் இலக்கு. இந்திய பணம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் அதானி மூலம் இந்தியா வருகிறது. பிரதமருக்கும், அதானிக்கும் இருக்கும் தொடர்பை பிரபல பத்திரிக்கைகள் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. அதானி குழுத்தின் முறைகேடுகள் இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.