ஆப்பிள் ஐபோனை காட்டி நாடாளுமன்றத்தை அலறவிட்ட ராகுல்காந்தி

 
rahulgandhi

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஒன்றிய அரசு திணறி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “இந்திய எல்லையில் சீனாவின் ஊடுருவல் இல்லை என பிரதமர் மோடி மறுக்கிறார். ஆனால் அதற்கு முற்றிலும் முரணாக, எல்லையில் 4,000 சதுர கி.மீ. தொலைவுக்கு சீனா உள்ளே நுழைந்துள்ளதாக நமது ராணுவம் கூறுகிறது. நீங்கள் சொன்னதை நமது ராணுவமே மறுக்கிறது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரை அமெரிக்காவுக்கு அனுப்பி உங்கள் அதிபரின் பதவி ஏற்பு விழாவில் எங்கள் பிரதமர் கலந்து கொள்ள ஆசைப்படுகிறார் வரட்டுமா? என ஒருபோதும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் பாஜகவை போல கெஞ்சிக் கொண்டிருந்திருக்க மாட்டோம்.

குடியரசுத் தலைவர் உரையில் எந்த முக்கியமான அம்சமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. இந்தியாவில் செல்போனை உருவாக்கவில்லை, உதிரி பாகங்களை ஒன்று சேர்த்து தருகிறோம். உற்பத்தி அனைத்தும் சீனாவிடம் உள்ளது. எனவே இந்தியா உற்பத்தியில் முழு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. நுகர்வோர் அதிகமாக உள்ளனர். ஆனால் உற்பத்தி மொத்தமும் சீனாவிடம் உள்ளது. உற்பத்தியை விடுத்து நுகர்வில் கவனம் செலுத்தினால் பற்றாக்குறை ஏற்படும். வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க ஒன்றிய அரசு திணறி வருகிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க எந்த ஒரு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை” என்றார்.