ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி..

 
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி..

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவர் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு  தேர்தல் பிரச்சாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது   குண்டு வைத்து கொல்லப்பட்டார்.  இந்நிலையில் அவரது  32வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமி என்றழைக்கப்படும்   ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி,  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே  ஆகியோர் மலர்தூவி மரியாதை  செலுத்தினர்.  

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா அஞ்சலி..

முன்னதாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி இன்று (மே 21-ம் தேதி) ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்துவார் என்றும், அதற்காக அவர் தமிழகம் வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்  வரது பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.