ராகுல் காந்தி அமோக வெற்றி - கொண்டாடும் தொண்டர்கள்!!
Jun 4, 2024, 16:20 IST1717498200566
![rr](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/206d7b2e61f572e1a69ff13555398f5d.webp)
கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் எம்பி ஆன ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் அவர் தற்போது வெற்றி பெற்றுள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் கிட்டத்தட்ட 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார் .
இந்த நிலையில் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் ரேபரேலி தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி வெற்றி அடைந்துள்ளார்.