சாதிய கட்டமைப்பை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்- ராகுல்காந்தி

 
கோவிட்-19 சோதனை கருவிகளை அரசுக்கு வழங்குவதில் சிலர் கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.. பிரதமர் தலையிட ராகுல்காந்தி கோரிக்கை….

சாதிய கட்டமைப்பை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும். ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஒரு சிலர் மட்டுமே இருக்க வேண்டும் என பாஜக விரும்புவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். 

Rahul

பிரான்ஸில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் உரையாற்றிய ராகுல்காந்தி, “இந்தியாவின் ஆன்மாவைத் தாக்க முயற்சிக்கும் எவரும் தங்கள் செயல்களுக்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். நாட்டை இந்தியா என்றோ அல்லது பாரத் என்றோ அழைப்பது பரவாயில்லை என்றாலும், மாற்றத்தின் பின்னணியில் உள்ள நோக்கமே முக்கியமானது. பாரத், இந்தியா ஆகிய இரண்டு வார்த்தைகளுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவை. இந்தியா, பாரத் ஆகிய இரண்டு சொல்லையும் அரசியலமைப்பு பயன்படுத்துகிறது. எங்கள் கூட்டணிக்கு இந்தியா என பெயரிட்டதால் பாஜகவிற்கு எரிச்சல் ஏற்பட்டிருக்கலாம். வரலாற்றை மாற்றியெழுத முயற்சிக்கும் பாஜகவை மக்கள் தூக்கி எறிவர். சாதிய கட்டமைப்பை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும். ஆதிக்கம் செலுத்துபவர்களாக ஒரு சிலர் மட்டுமே இருக்க வேண்டும் என பாஜக விரும்புகிறது.


பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசும் வலதுசாரி அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவா சங்கமும் (ஆர்எஸ்எஸ்) இந்தியாவில் சிறுபான்மையினரை ஒடுக்கிரது. சிறுபான்மையினர் என்பதற்காக மக்கள் தவறாக நடத்தப்படும் இந்தியாவை நான் விரும்பவில்லை. நான் பகவத் கீதை, உபநிடதங்கள் மற்றும் பிற இந்து மத நூல்களைப் படித்திருக்கிறேன். இந்த பாஜகவினர் இந்து தேசியவாதிகள் அல்ல. அதிகாரத்திற்காகவும், ஆதிக்கத்திற்காகவும் அவர்கள் எதையும் செய்யலாம். இதில் இந்துத்துவம் எதுவும் இல்லை” என்றார்.