வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறல் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

 
Rahul Gandhi neet

வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த வெள்ளி கிழமை தொடங்கியது. 2025-26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று மாநிலங்களவை கூடியதும் கும்ப மேளா கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்தது தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.  

இந்த நிலையில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், குடியரசு தலைவர் உரையில் எந்த முக்கியமான அம்சமும் இல்லை. நாட்டின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. உற்பத்தி துறையில் இந்தியா பின் தங்கியுள்ளது. வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. வேலையின்மை பிரச்னைக்கு தீர்வு காண பிரதமர் மோடி தவறிவிட்டார். இளைஞர்களுக்கு எந்த ஒரு திட்டமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை என கூறினார்.