ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி

 
rahul

ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி. இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.

Rahul


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார்.  ஏற்கனவே கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் களமிறங்கி உள்ள நிலையில், உ.பி.யில் உள்ள ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார்.  அமேதி தொகுதியில் ராகுல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு கே.எல்.சர்மா போட்டியிடுவார் என அறிவித்துள்ளார். 

rahul gandhi

அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மாவும் போட்டியிடவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.கேரளா மாநிலம் வயநாட்டைத் தொடர்ந்து 2வது தொகுதியாக ரேபரேலி தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அமேதியில் தோல்வி அடைந்தார் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது.