பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்...பீதி அடையாதீர்கள் - ராகுல் காந்தி

 
rahul

பிரதமர் மோடி அவர்களே பீதி அடையாமல் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் எம்.பி. ஜார்கண்ட் மாநிலத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பிரதமர் மோடி தன்னை OBC என்று அழைக்கிறார்.  ஆனால் பின்னர் அவர் குழப்பமடைந்து, நாட்டில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன - பணக்காரர் மற்றும் ஏழை என்று சொல்லத் தொடங்கினார். எனவே, இந்தியாவில் சாதிகள் உள்ளதா இல்லையா என்பதை முதலில் அவர்கள் தீர்மானிக்க வேண்டும். 

நாட்டில் 8% பழங்குடியினர், 15% தலித்துகள் மற்றும் 50% ஓபிசி மக்கள் உள்ளனர்.  அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.  யாருடைய மக்கள் தொகை என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். பிரதமர் மோடி அவர்களே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள், பீதி அடையாதீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.