70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று மோடி கூறும்போது, அது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமதிப்பு இல்லையா?... ராகுல் காந்தி

 
ராகுல் காந்தி

70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று அவர்  (நரேந்திர மோடி) கூறும்போது, அது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமதிப்பு இல்லையா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து சென்றுள்ளார். லண்டனில் நேற்று ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடியை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்கள் ஆதரிக்கப்படுகிறார்கள், அவரை பற்றியோ, அவரது அரசை பற்றியோ கேள்வி எழுப்புவர்கள் தாக்கப்படுகின்றனர். நான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளரா என்பது ஆலோசனைக்கு இல்லை. 

மோடி

பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.ஐ தோற்கடிப்பதே எதிர்க்கட்சிகளின் மைய எண்ணம். வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளை எல்லாம் ஒருவர் தீர்த்து வைப்பார் என்ற எண்ணம் மேலோட்டமானது. இந்த பிரச்சினைகளுக்கு பங்குதாரர்களுடனும், அக்கறையுள்ள அரசாங்கத்துடனும் உரையாடல் தேவைப்படுகிறது. பிரச்சினைகளை சரிசெய்ய மேலிருந்து கீழாக, ஒரு மனிதனாக, நரேந்திர மோடி பாணியில் மந்திரக்கோலை வைத்துக்கொண்டு ஓடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனது நாட்டை நான் ஒருபோதும் அவதூறாக பேசியதில்லை, அதை செய்ய மாட்டேன். 

4 மாதத்தில் வேலையிழந்த 2 கோடி பேர்… வேலையின்மை உண்மையை மறைக்க முடியாது… ராகுல் காந்தி ஆவேசம்

70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை என்று அவர்  (நரேந்திர மோடி) கூறும்போது, அது ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமதிப்பு இல்லையா?. எங்களை உள்ளே வந்து தள்ளுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதுதான் காங்கிரஸின் சீன கொள்கை. உண்மை என்னவென்றால் சீனர்கள் எங்கள் எல்லைக்குள் நுழைந்தனர், எங்கள் வீரர்களை கொன்றனர், பிரதமர் அதனை மறுத்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.