மத்திய அரசின் அவசர சட்டம்.. உச்ச நீதிமன்றம் மற்றும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும்- ஆம் ஆத்மி தாக்கு

 
ராகவ் சதா

மத்திய அரசின் அவசர சட்டம்,  உச்ச நீதிமன்றம் மற்றும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும் என்று ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா குற்றம் சாட்டினார்.


டெல்லி அரசுக்கு அதிகாரிகள பணிநியமன அதிகாரம் அளித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இந்நிலையில், யூனியின் பிரதேச உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்கு புதிதாக ஆணையம் அமைக்க மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை அவசர சட்டம் பிறப்பித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் மற்றும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும் என்று ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.

மத்திய அரசு

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சாதா டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், நன்கு சிந்திக்கப்பட்ட, ஒருமித்த அரசியலமைப்பு அமர்வு தீர்ப்பை பொறுப்பட்ட அரசியல் சட்டத்தின் மூலம் முற்றிலும் மீறல். 1.கூட்டாடட்சி: அரசியலமைப்பின் அடிப்படை கூட்டமைப்பின் ஒரு பகுதி. 2. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களுக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பு அதிகாரங்கள். 3.அமைச்சர்களுக்கு சிவில் சேவைகள் பொறுப்புக்கூறல் கொள்கை. நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்ல, வாக்காளர்களை அவமதிக்கும் செயலாகும்.

உச்ச நீதி மன்றம்

உசச் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அளித்த தீர்ப்பை அரசியல் அவசரச் சட்டம் கொண்டு வந்து ரத்து செய்ய மத்திய அரசு துணிந்தது. இந்த உத்தரவு நாட்டின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரங்களை தடைசெய்கிறது. இது மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மற்றும் மக்கள் ஆணையை அவமதிக்கும் செயலாகும். அடுத்து என்ன?. பா.ஜ.க. அல்லாத ஆட்சிக்கு வாக்களிக்கும் எந்த மாநிலமும் அதன் சட்டமன்றத்தில் இருந்து அகற்றப்பட்டு, மத்திய நிர்வாக பிரதேசமாக மாற்றப்படும் என்பது அரசியலமைப்பு திருத்தம் என்று  பதிவு செய்துள்ளார்.