வரும் காலத்தில் காங்கிரஸையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாடு புறக்கணிக்கும்... உத்தரகாண்ட் முதல்வர்

 
புஷ்கர் சிங் தாமி

எதிர் வரும் காலத்தில் காங்கிரஸையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாடு புறக்கணிக்கும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி  தெரிவித்தார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை வரும் 28ம்  தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை குடியரசு தலைவர்தான் திறந்து வைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்  தி.மு.க., வி.சி.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனா (யு.பி.டி.), திரிணாமுல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற  கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க உள்ளதாக  அறிவித்தன.

காங்கிரஸ்

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறுகையில், எதிர்வரும் காலத்தில் காங்கிரஸையும் அதன் கூட்டணி கட்சிகளையும் நாடு புறக்கணிக்கும். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக பிரதமர் மோடிக்கு நன்றி. மாநிலத்துக்கு வரும் அனைத்து பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் இதன் மூலம் பலன் அடைவார்கள் என்று தெரிவித்தார்.

பிரகலாத் ஜோஷி

நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர்  பிரகலாத் ஜோஷி  நேற்று முன்தினம், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேறப்போவதில்லை என்னும்  முடிவை மறுபரீசிலனை செய்து, திறப்பு விழாவில் பங்கேற்குமாறு  எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரச்சினை இல்லாத விவகாரத்தில்,  பிரச்சினையை ஏற்படுத்தி விழாவை புறக்கணிப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறியுள்ளார். விழாவை புறக்கணிக்கும்  முடிவை எதிர்க்கட்சிகள் மறுபரீசிலனை செய்யவேண்டும் என்றும்,  விழாவில் பங்கேற்க வேண்டும் என்றும் பிரகலாத் ஜோஷி  வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.