தம்பதியை கடித்துக் குதறிய பிட்புல் நாய்- அதிர்ச்சியூட்டும் காணொலி

 
தம்பதியை கடித்துக் குதறிய பிட்புல் நாய்- அதிர்ச்சியூட்டும் காணொலி

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருடன் ஒரு இடத்தைப் பார்வையிடச் சென்ற தம்பதியினர் மீது பிட்புல் நாய் ஒன்று தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கின்றனர்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் ரியல் எஸ்டேட் முகவர் ஒருவருடன் ஒரு இடத்தைப் பார்வையிடச் சென்ற தம்பதியினர் மீது பிட்புல் நாய் ஒன்று தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் காண்போரை பதைபதைக்க செய்கின்றனர். வாடகைக்கு வீடு பார்க்கச் சென்ற அங்கித் சபர்வால் - ஷிஃபாலி தம்பதியை அங்கிருந்த பிட்புல் நாய்  திடீரெனபாய்ந்து தாக்கியதாகத் தெரிகிறது. அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து அவர்களைக் காப்பாற்ற உதவினர்.


இதில் படுகாயமடைந்த பெண்ணுக்குக் கையில் தீவிர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உரிமையாளரின் அலட்சியம் குறித்து காவல்துறையினர் பிஎன்எஸ் (BNS) சட்டப்பிரிவு 291-ன் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், பாட்டியாலா மாநகராட்சி பிட்புல் போன்ற ஆபத்தான நாய்களுக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.