புனே சொகுசு கார் விபத்து- சிறுவனை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

 
புனே சொகுசு கார் விபத்து- சிறுவனை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மது போதையில் சொகுசு காரை இயக்கி இருவர் உயிரிழப்புக்கு காரணமான 17 வயது சிறுவனை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

tn

மும்பை  புனேவில் கடந்த மாதம் 20 ஆம் தேதி அதிகாலை சொகுசு கார் விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த இருவர் உயிரிழந்தனர். அந்த காரை 17 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளார். இதே இடத்தில் சிறுவனை விபத்து நிகழ்ந்த இடத்தில் மடக்கிப் பிடித்த பொதுமக்கள் பின்னர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.  சிறார்களுக்கான நீதிமன்றத்தில் சிறுவன் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது நீதிமன்றம் அந்த சிறுவனுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கியது. இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சிறுவன் சிறார் கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டார். சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், இன்று  இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், சிறுவனை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தது. சிறார் கண்காணிப்பு இல்லத்தில் இருந்து சிறுவனை விடுவிக்க கோரி அவரது உறவினர் மும்பை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இந்த தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது. சிறுவனை கண்காணிப்பு மையத்தில் அடைத்தது சட்டவிரோதமானது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உளவியல் நிபுணர்கள் மூலம் அவருக்கு ஆலோசனை அளிக்கவும் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளது