காலாப்பட்டு ஷாசன் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயம் - தமிழிசை வேதனை

 
Tamilisai

புதுச்சேரி, காலாப்பட்டு ஷாசன் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், புதுச்சேரி, காலாப்பட்டு ஷாசன் கம்பெனியில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் புதுச்சேரி அரசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இத்தகைய விபத்து ஏற்பட்டதற்கான காரணங்களை அறிய முறையான விசாரணை நடத்தப்படும். எதிர்காலத்தில் இது மாதிரியான விபத்துக்கள் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும்.


இது தொடர்பான சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை காவல்துறையினர் மக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பற்றிய விவரம் அறிய குடும்பத்தினருக்கு தகவல் சேவை மையம்  மூலம் செய்திகள் அனுப்பப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.