சாலையில் வீலிங் செய்த இளைஞரின் பைக்கை பாலத்தில் இருந்து கீழே தூக்கி போட்ட பொதுமக்கள்

 
சாலையில் வீலிங் செய்த இளைஞரின் பைக்கை பாலத்தில் இருந்து கீழே தூக்கி போட்ட பொதுமக்கள்

பெங்களூரு - துமகூரு நெடுஞ்சாலையில் வீலிங் செய்த இளைஞருக்கு, பொதுமக்களின் நூதன தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூரு - துமகூரு நெடுஞ்சாலையில் இளைஞர் ஒருவர், வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் வகையில் வீலிங் செய்து கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி ஒரு வாகனத்தையும் மோதியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இளைஞரின் பைக்கை பாலத்தில் இருந்து கீழே தூக்கி போட்டர். 30 அடி உயரத்தில் இருந்து பைக்கை கீழே போட்டதில், பைக் முற்றிலும் நொறுங்கியது.  



இரண்டு டியோ ஸ்கூட்டர்கள் தும்கூர் சாலையில் அடைக்கமாரனஹள்ளி அருகே உள்ள மேம்பாலத்தில் இருந்து சர்வீஸ் சாலையில் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.