குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை!

 
tn

குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

tn
குடியரசுத் தலைவர் இல்லம்  டெல்லியில்  அமைந்த இந்தியக் குடியரசுத் தலைவர்களின் வாழிடம் ஆகும். இது 19,000 சதுக்க மீட்டர் பரப்பளவு கொண்ட அரண்மனையையும், அதனைச் சுற்றியிருக்கும் 320 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியையும் குறிக்கும். அரண்மனையைச் சுற்றி தோட்டங்கள், அதிகாரிகளின் அலுவலகங்கள், திறந்தவெளிகள் ஆகியன உள்ளன.

tn

இந்நிலையில் இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட பொது மக்களுக்கு இன்று முதல் செப்டம்பர்10ம் தேதி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஜி 20 மாநாட்டையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  11 ஆம்  தேதியில் இருந்து மீண்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்  என்று கூறப்படுகிறது.